மத்தியிலும் நாமே., மாநிலத்திலும் நாமே., விரைவில் நமக்கு நாமே..!! கனிமொழி எம்.பி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்., தூத்துக்குடி குறுக்கு சாலையில் உள்ள குளத்தூர் சாலையில் நேற்று ஊராட்சி சபை கூட்டமானது நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கவே., தி.மு.க-வின் பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி அவர்கள் காலத்து கொண்டு சிறப்புரையாற்றி., அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் பேசியதாவது., மக்களிடம் குறைகளை கேட்ட போது பெரும்பான்மையாக மக்களின் அடிப்படை வசதிகள்., பள்ளிக்கூடம் மாறும் மேம்பால வசதிகள் குறித்த குறைகள் மக்களால் கூறப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் தற்போது வரை நடைபெறவில்லை., இனியும் நடைபெற போவதும் இல்லை. 

சரியான நேரத்தில் உள்ளாட்சி தேர்தலானது நடைபெற்று முடிந்திருந்தால்., நமது பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அவர்களிடம் எடுத்து கூறியிருக்கலாம். அதன் மூலம் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிருக்கலாம். தேர்தலில் உள்ள தோல்வி பயத்தின் காரணமாக இன்னும் தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. 

தற்போது நடைபெறும் ஆட்சியில் உள்ள அதிகாரிகளுக்கு மக்களை பற்றிய கவலை துளியும் இல்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தாலும்., இரு தேர்தலையும் வெற்றிபெற்று பின்னர் மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம். விரைவில் தமிழகத்திலும்., மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். 

தேர்தல் சமயத்தில் மக்களுக்காக நன்மைகளை செய்யக்கூடிய அரசு எது?., யாருடைய ஆட்சியில் மக்ளுக்காக ஓடோடி வந்து உழைப்பார்கள்? யாருடைய ஆட்சியில் நியாயம் கிடைக்கும்? என்பதை மனதில் நினைத்துக்கொண்டு மக்கள் தேர்தலில் வாக்குகளை செலுத்த வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi MP speech in thoothukudi dmk party meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->