கனிமொழி, துரைமுருகன் மகன் தகுதி நீக்கம்? உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் ஒரு பக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்க, தேர்தல் நேரத்தில் வெளியாகும் கருப்பு பணத்தை பிடிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், முதல் ஆளாய் சிக்கியது திமுகவின் பொருளாளர் துரைமுருகன். கடந்த வாரம் அவரது வீடு, கல்வி நிறுவனங்கள், அவரின் மகனுக்கு சம்மந்தமான இடங்களிலும், அவருக்கு ஆதரவாளர்களின் இடங்களிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 11 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட அனைத்து பணமும் வார்டு வாரியாக பெயர் எழுதி, பிரித்து வாக்காளர்களுக்கு கொடுக்க தயாராக இருந்தது. இதேபோல், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழிக்கு ஆரத்தி எடுக்கும் போது தலா 2000 ரூபாய் கொடுத்த காணொளி வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், ''தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. 

வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் அவர்களை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KANIMOZHI AND KATHIR ANAND MONEY ISSUE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->