உலகநாயகனால் உச்சகட்ட கொந்தளிப்பில் உடன்பிறப்புகள்! ஸ்டாலினை மொத்தமாக வச்சு செய்த கமல் ஹாசன்! பழிக்கு பழி எனவும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசனை திமுகவின் முரசொலி பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். அதே போல நடிகர் சந்திரசேகர் பெயரில் கடுமையான அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு இதுவரை பதில் அளிக்காத நடிகர் கமல்ஹாஸன் இன்று தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திமுகவையும் ஸ்டாலினையும் கிழி கிழி என, சட்டசபையில் சட்டையை கிழித்ததை கிழித்துவிட்டார். 

கிராம சபை என்ற ஒன்று  இருப்பது உங்களுக்கு தெரியாதா? ; ஒரு சின்னப்பையன் அதை  செய்த பின் நீங்கள்  செய்கிறீர்களே; வெட்கமாக  இல்லையா ஸ்டாலின் உங்களுக்கு?” என கமல்ஹாசன் நேரிடியாகவே விமர்சித்துள்ளார். திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம்; மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன் என பகிரங்கமான பேட்டியை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். 

மேலும் சட்டசபையில் நான் சட்டையை கிழித்துக்கொண்டு இருக்க மாட்டேன். அப்படியே சட்டையே கிழிந்தாலும் அதே சட்டையுடன் வெளியே வராமல் புதிய சட்டையுடன் தான் வெளியே வருவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும் எனவும் கமல் தெரிவித்துள்ளார். 

அவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் பேசியதன் சுருக்கம், சென்ட்ரிசம்  நடுவுநிலமை என்றால் என்ன? என்ற கேள்விக்கு, நாம் எடுக்கும் முடிவு தெளிவாக இருக்க வேண்டும். அது சரியாக இருக்க வேண்டும், அது இடதாக இருந்தாலும் வலதாக இருந்தாலும் சரி என கூறினார். 

"நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் யாரும் நல்லவர்களுக்கு வாக்களிப்பதில்லை. நம்பிக்கையுடன் கூடிய பங்களிப்பு  என்பது மிக முக்கியம். உங்களால் மட்டுமே இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியும். 72 வருடங்கள் தாமதமாக இருந்தால் கூட பரவாயில்லை இப்பொழுதாவது நாம் தொடங்குவோம். தமிழ்நாடு நமது குழந்தை அது தள்ளாடி நடந்துகொண்டிருக்கின்றது அதை வாரியணைக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் இளைஞர்களிடம் தான் இருக்கின்றது. அரசியல் மாண்பின் இறுதி நம்பிக்கையாக இளைஞர்கள் இருப்பதால் தான் நான் தொடர்ந்து இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என கூறியுள்ளார். 

"எதற்காகவும் யாருக்காகவும் தியாகம் செய்யவேண்டாம்.நமக்காக நாம் செய்யவேண்டும். சத்தியாகிராகம் என்பதை தனிப்பட்ட முறையில் எடுத்துச்செல்ல வேண்டும். அரசியலில் நான் என்னையே முதலீடாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். என்னால் இயன்றதை மக்கள் நீதி மய்யம் கட்சியில் பங்களிப்பு செய்திருக்கின்றேன். இந்த நாட்டை கட்டியமைப்பதற்கு தேவையான முழுமுதல் தேவை நீங்கள் தான். 
அரசியல்வாதிகள் சரியால வேலை செய்கிறார்களா என்று விழிப்புணர்வுடன் கண்காணியுங்கள். முழுநேர அரசியல்வாதி என்று சொல்பவர்கள் வேறு வேலையில்லாமல் வெறும் சம்பாதிப்பதற்காக அரசியலை சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்கள்" எனவும் கடுமையாக கூறியுள்ளார். 

"உங்கள் கண்ணாடியில் நீங்கள் உங்கள் தலைவனை நீங்கள் தினமும் பார்க்கலாம். நீங்கள் தான் தலைவர்கள். தலைவர்களைத் தேடாதீர்கள், சாதியைச்சொல்வது என்பதை பெருமையாக நினைப்பதை இளைஞர்கள் நீங்கள் தான் மாற்றியமைக்க வேண்டும். தீதும் நன்று பிறர் தர வாரா என்பது போல இன்று நடக்கும் அனைத்து அட்டூழியங்களுக்கு நாம் அனைவருமே காரணம். அரசியலை தவிர்த்து நம்மால் இயங்க முடியாது. 
அரசியல் மாணவர்களுக்கு தேவையற்றது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என கமலஹாசன் பேசி முடித்தார். இதற்கு பிறகு தான் அவர் திமுகவை விளாசி தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhasan slams mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->