திராவிடம் 2 கட்சிகளுக்கும்., 3 குடும்பத்திற்கும் உரியதா?.! அனைத்தும் அரசியலுக்காகவே நடக்கிறது.!! கொந்தளித்து கமல்ஹாசன் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தின் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது., 

தமிழகத்தில் கடந்த 40 வருடங்களாக அரசியலில் ரவுடிகளின் கையானது ஓங்கியுள்ளது., இதன் மூலமாக அனைத்து கட்சியினனரை ரவுடி என்று கூறவில்லை. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய காரணத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். 

கடந்த 40 வருடங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு செய்யாததை நான் செய்து., தூய்மையான அரசை கொண்டு வருவேன். அதற்காக அனைவரும் ஒருமைப்பாட்டுடன் இணைந்து செயல்பட வேண்டும். 

திராவிடம் என்பது இரண்டு கட்சிகள் மற்றும் 3 குடும்பத்தாருக்கு சொந்தமான ஒன்று கிடையாது., நாடு தழுவியதே திராவிடம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலமாக மக்கள் மாற்றத்தை விரும்புவதை அறிந்தேன். 

தமிழகத்தில் விவசாயமானது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது., மக்கள் அனைவரும் மறதியில் இருந்து வருகின்றனர்., அதனை அறவே போக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தூய்மையான அரசியலை கொண்டு வரவேண்டும். என்னை போலவே மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். 

மதுரைக்கு இந்திய பிரதமர் வந்த சமயத்தில் இணையதளங்களில் #மோடிகோபேக் என்ற வாசகமானது அதிகளவில் இடம்பெற்று ட்ரெண்ட் ஆனது., இந்த விஷயமும் அரசியலுக்காக நடைபெறுகிறது. அரசியல் ஒன்றும் தீண்டத்தகாதது அல்ல., அரசியலில் இழந்த மாண்புகளை மீட்க வேண்டும். 

அனைவரும் ஒன்று சேர்ந்து மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்., பல்வேறு விதமான அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டணி குறித்தும் தனித்து போட்டியிடுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal Hassan speech about current political problem in cudallore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->