மக்களவை தேர்தல், யாருடன் கூட்டணி! முடிவை அறிவித்தார் கமல்! வேட்பாளர்கள் பட்டியலும் தயார்! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இன்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் இன்று காலை கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

தொண்டர்களிடையே பேசியே கமல், தமிழகம் முழுவதும் நமது கட்சியின் கொடி ஏறிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் ஆதரவு நமக்கு இருப்பதால் வருகின்ற தேர்தலில் நாம் தனித்தே நிற்போம் என அறிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாம் செய்யவேண்டிய வேலைகள் அதிகம் இருக்கின்றது, குறுகிய நாட்களே உள்ளதாகவும் கமல் பேசியுள்ளார்.  

முதலில் இந்த இடத்திலே நான் தனியாக நின்றேன், இப்போது இங்கே கூட்டம் கூடியிருக்கிறது. கட்சிக்கு பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி என்று கமல் பேசினார். மேலும் வருகின்ற 24 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் பட்டியல் படிப்படியாக அறிவிக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என கமல் அறிவித்துள்ளார். 

கட்சியின் முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் நாகப்பட்டினம் மாவட்டம் செல்லும் கமல்ஹாசன், வேதாரண்யம் பகுதியில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் மாலை 6.30 அளவில் திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் (தெற்கு வீதி, திருவாரூர்) மக்கள் முன் உரையாற்றுகிறார்



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal hassan said makkal neethi maiyam contest in 40 seats


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->