ராகுலையும், சோனியாவையும் இதனால் தான் சந்தித்தேன் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunal


மரியாதை நிமித்தமாகவே ராகுலையும் சோனியாவையும் சந்தித்தேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கெஜ்ரிவால் பெங்களூரில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. காங்கிரஸ் தலைவரை சந்தித்ததால் அரசியலில் ஒரு வழிப்பாதையில் செல்கிறேன் என்று சொல்ல வேண்டாம், அரசியலில் என்னுடைய பாதை என்ன என்பதை நான் முடிவு செய்து விட்டேன்.

                             

மேலும் கமல்ஹாசன் கூறுகையில் காவிரி விவகாரத்தில் வெற்றி விழா கொண்டாட வேண்டியது தமிழக விவசாயிகள்தான். மற்றவர்கள் அதற்கு வழிபடவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் எண்ணம் மற்றும் நாம் அனைவரின் எண்ணமும் கூட. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதற்கு போதுமான அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை எதிர்ப்பாராத விதமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது  அதை ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சனம் செய்வோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் போது மக்கள் நீதி மய்யத்தின் முடிவு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து முடிவு எடுப்பேன். இப்போது அதை பற்றி  சொல்ல முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan said about Central Government's approach to Cauvery affair.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->