அரசியலில் திடீர் பரபரப்பு... முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கும் கமல்ஹாசன்!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலை இந்திய மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், குடியரசு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. பாராளுமன்ற தொகுதி  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கமல்ஹாசன் பெயர் இடப்பெறவில்லை.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதலைச்சர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். பேசிய பிறகு சென்னைக்கு திரும்ப உள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை ஆகும். முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து தள்ளினார். மக்களவை தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal haasan meet mamata banerjee


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->