வரும் முன்னரே இத்துனை அளப்பரையா..? ஊர் முழுக்க ஒரு இடம் கூட பாக்கி இல்லை, நாளை என்ன செய்யபோகிறார்களோ..? - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் நாளை  கட்சி தொடங்கவுள்ளதாகவும்,  தாம் பிறந்த இடமான ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தனது கட்சியின் பெயரை  அதிகார  பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்..

நாளை ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

கட்சி தொடர்பாக இவர் அரசியலில் மூத்த தலைவர்கள் பலரைசந்தித்து வாழ்த்து பெற்றார்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தியாகராயநகர்  நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அழைப்பிதல் விடுத்து, அவரது வாழ்த்துக்களை பெற்றார்

இதற்கடுத்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியை திடீரென சந்தித்து பேசியுள்ளார். மூத்த தலைவர் கருணாநிதியின் வாழ்த்து பெறவே அவரை சந்தித்ததாக  கமல் கூறியுள்ளார்

இவர்களுக்கு அடுத்து இவர் சந்தித்த பிரபலம், தேமுதிக தலைவர் விஜயகாந்த்.விஜயகாந்த்தை, சந்தித்து ரொம்ப நாள் ஆகி விட்டதால், அவரது  நலம் குறித்து விசாரிக்க வந்தேன், என கூறி இருந்தார்

இவரது அரசியல் பிரவேசம் குறித்து , ரசிகர்களின் வரவேற்பு,

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியிடன் வரவேற்று வருகின்றனர்.

கட் அவுட்டில் இவரது ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தது, முடங்கி கிடக்கும் தமிழகத்துக்கு இனி அம்மாவும் நீயே..! அப்பாவும் நீயே...! என்றும் அப்துல் கலாம் உருவம் போல கமல் உருவம் அச்சடித்தும், அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்களை அடித்து ஒட்டிவருகின்றனர்

மேலும் இவர்கள் ஒரு படி மேலே சென்று,  புதிதாக பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்

அந்த பாடலின் வரிகள் "வா ராசா... வா ராசா... கமல ஹாசா" என்றபடி அந்த பாடல் உள்ளது. இந்த பாடலை திவ்யா நாயர் என்பவர் பாடியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal fans composed new song for kamal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->