சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு சம்மன் !! நேரில் ஆஜராகும்படி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கு ஆறுமுக சாமி ஆணையம்  சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார். 
 
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர்,  உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ  மருத்துவர்கள்  உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன்,  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆறுமுக சாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 18ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும்  பொன்னையன் ஆஜராகவும்,  20ம் தேதி துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆஜராகும்படியும் ஆறுமுக சாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeyalalitha Death Case Enquiry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->