பாஜகவை கழட்டிவிடும் அதிமுக?! கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை.! தமிழக அமைச்சர் பகீர் பேட்டி.!!  - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

மற்ற எந்த கட்சிகளின் கூட்டணியும் உறுதியாகவில்லை. மற்ற அனைத்து கட்சிகளுமே கூட்டணி தொடர்பான பேச்சி வார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி இல்லை என்று இந்த இரண்டு கட்சிகளே நாளை அதிகாரபூர்வமாக தெரிவித்தாலும் அதனை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த கூட்டணி அமைந்துள்ளது.

போதா குறைக்கு எதிர்க்கட்சி முதல் பக்கத்து மாநில முதல்வர் வரை ஆளும் அதிமுக அரசு, பாஜகவின் சொல்படி கேட்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, வரும் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வர இருக்கிறார். அப்போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று பாஜக அரசியல் வட்டாரங்கள் பேசி கொள்கின்றன.

இரு தினங்களுக்கு முன் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்த போது கூட  அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அன்று மாலையே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களும் சென்னை வந்தார். கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த வந்ததாக பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

பின்னர் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் பாஜக 8 முதல் 12 தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதிமுக 4 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று தெரிவிக்கவே, கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ''மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுடன் அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தே இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்து இருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் சென்னை விமான நிலையத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தான் வந்ததாக கூறிய பின்பும், இல்லவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அதிமுக-பாஜக கூட்டணி உடன்படவில்லை என்றே தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar open talk about admk bjp alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->