ப.சிதம்பரம் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை : பின்னணி குறித்து சிதம்பரம் பகீர்.., - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டையும் அவர் கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில்,சில தினங்களுக்கு முன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு ஒன்றில் அவர் ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ப. சிதம்பரத்தின் உறவினர்கள் மற்றும் அவர்களது வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இதனைத் தொடர்ந்து இன்று ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தினர்.

இன்று காலை 7.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த ஆரம்பித்தனர். 5பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தி வருகிறது. இதேபோல டெல்லியிலுள்ள சிதம்பரத்தின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சமயத்தில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,இது குறித்து விளக்கமளித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன்,"காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்து சோதனை நடத்தினர். இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனர் பிறப்பித்திருப்பதாக ஆவணங்களைக் காட்டினர்.

இந்த சோதனையில் அவர்கள் எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்றவர் ஆஜரானார். கார்த்தி ஆஜர் ஆகவில்லை என்பது தவறான தகவல்" என்று குறிப்பிட்டுளார்.

அமலாக்கத்துறையினரின் இந்த அதிரடி சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், " இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகளின்போது ஏதும் கைப்பற்றப்படவில்லை. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரிக்க முடியாது. ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் எந்த அமைப்பும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அமலாக்கத்துறையின் சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT dept officers raid in pa chidhambaram's house Nothing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->