அத மட்டும் செஞ்சுராத.. இத்தனை நாளா நல்லா தானே இருந்த, நாளைக்கு மட்டும் என்னவாமா..? பன்னீரை நினைத்து பதறி துடிக்கும் எடப்பாடி..!! - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 23-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள, அதிமுக-வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையைப் பெற எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி யினரும், டிடிவி தினகரன் அணியினரும் தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளனர்.

இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிர மாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.இரட்டை இலை சின்னம்யாருக்கு என்பதை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையமும் இந்த விசயத்தில் முனைப்பு காட்டி வருகிறது. திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து டிடிவி தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிக்கின்றனர் என்று எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புதான் அவ்வாறு இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று டிடிவி தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.

பிரமாணப் பத்திரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

நாளை விசாரணை நடைபெற உள்ள நிலையில், இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் தரப்பில் கொடுத்திருந்த புகாருக்கு, பதில் மனு தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நாளைய முடிவு எடப்பாடிக்கு தான் சாதகமாக வரும் என்று அனைத்து தரப்பினராலும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை இலை கிடைத்த பின்னர்  பன்னீருக்கு எதிரான நடவடிக்கை தொடங்கினால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வைத்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

As OPS, EPS, Dinakaran camps decide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->