தேதி குறித்த உச்சநீதிமன்றம்.! இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் நெருக்கடி.!! - Seithipunal
Seithipunal


நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்கள் பெற்ற நிதி குறித்த பத்திரங்கள் மற்றும் நிதி அளித்தவரகள் பற்றிய விவரங்களை அடுத்த மாதம் இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் போது, தேர்தல் நிதி பத்திரம் மூலம் வழங்கலாம். அதாவது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்பும் நபர்கள்,  வங்கிகளில் கொடுக்கப்படும் பத்திரங்கள் மூலமாக தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு பணத்தை அளிக்கலாம். 

அப்படி நன்கொடை அளிக்கும் நபர்கள் யார் என்ற விவரம் இதில் இடம்பெறாது.  மேலும், அரசியல் கட்சிகள் பத்திரங்களை கொண்டு பெறப்படும் பணத்தை வைத்து கட்சி பணிகளில் ஈடுபடலாம். இந்த முறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையில், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் கொடுத்தார் என்ற விவரம் தெரியாது என்பதால், இதனை பலரும் எதிர்த்தனர். இதற்கிடையே இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ''நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்,  தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்து மே 30ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்'' றன்று உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN SC NEW ORDER TO ALL PARTY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->