மொத்த இந்திய பொருளாதாரமும் சீரழிய போகிறதா.? மொத்தமாய் 4 இலட்சம் கோடி நஷ்ட்டம்.!! அறிவிக்கப்படாத நெருக்கடி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 3 மாதமாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் அந்நிய நேரடி முதலீடு குறைவு ஆகியன இந்திய ரூபாய் மதிப்பு சரிவிற்கான காரணமாகவும். 

குறிப்பாக கடந்த மாதம் முதல் இந்திய ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இந்நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.  இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ.74.45-க்கு வர்த்தகம் ஆகிறது. 

இந்திய ரூபாய்க்கு நிகரான 

ஐரோப்பா (யூரோ) - ரூ.85.24., 
பிரிட்டன் (பவுண்டு) - ரூ.97.64., 
ஆஸ்திரேலியா(டாலர்) - ரூ.52.64., 
சிங்கப்பூர்(டாலர்) -ரூ.53.65., 
ஹாங்காங் (டாலர்) - ரூ.9.47., 
ஜப்பான் (யென்) -ரூ.0.66, 
மலேசியா (ரிங்கட்) - ரூ.17.86., 
குவைத்(தினார்)- ரூ.244.25., 
ஓமன் (ரியால்) -ரூ.192.74, 
கத்தார் (ரியால்) - ரூ.20.38, 
சவுதி (ரியால்) - ரூ.19.78, 
தாய்லாந்து (பாத்) - ரூ.2.25., உள்ளது.

இந்த தொடர் வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படியான வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், இன்று காலை பங்குசந்தையில் 10,460-க்கு வர்த்தகமாகத் தொடங்கிய சந்தை நேரடியாக 291 புள்ளிகள் இறக்கம் கண்டு உள்ளது. நிஃப்டி 50-ன் பட்டியலில் உள்ள 50 பங்குகளில் ஓ.என்.ஜி.சி., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஐஓசி ஆகிவற்றின் பங்குகளை தவிர மற்ற  அனைத்து பங்குகளும் வர்த்தகத்தில் இறங்குமுகத்துடன் உள்ளது.

இன்றைய (11.10.2018) வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 980  புள்ளிகள் குறைந்து 33,774.89 புள்ளிகளாக வர்த்தகம் உள்ளது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 299.75 புள்ளிகள் சரிந்து 10,160.35 புள்ளிகளாக உள்ளது. பங்குச்சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் வெறும் 5 நிமிடத்தில் சுமார் ரூ.4 லட்சம் கோடி இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வு.. மற்றோரு பக்கம் இந்திய ரூபாயின் வீழ்ச்சி., தற்போது பங்குசந்தை வீழ்ச்சி என்று நாட்டு மக்கள் எதுவும் சொல்ல முடியாத சிக்கலில் உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக தெரிவித்து வருகின்றன. இவை அனைத்தையும் விட இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தின் நிலை என்ன என்று கூற வார்த்தைகள் இல்லை. சமீபத்தில் மும்பையிலும், டெல்லியிலும் நடந்த விவசாயிகளின் போராட்டங்களே சாட்சி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian money down in worst stage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->