எகிறும் ஹார்ட் பீட்.! இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தொடங்க போகும் போர்.!! உலக கோப்பையின் முன்னோட்டம்.!!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. அடுத்தப்டுயாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்க உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கடந்த இது தினங்களாக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்க உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி அல்லது ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, ஆடம் ஜம்பா, கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஜெயே ரிச்சர்ட்சன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச ஒரு நாள்  தொடர் இதுவாகும். இந்த தொடர் கே.எல் ராகுல், விஜய் சங்கர், ரிஷாப் பான்ட் ஆகியோருக்குமிகவும் முக்கியமானது. 

இரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இந்திய அணி 2 வெற்றியும், 3 தோல்வியும் கண்டுள்ளது. இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிக்ஸர் மழை காண ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வானிலைக்கு எந்த குறுக்கிடும் இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஐ.சி.சி. ஒரு நாள் தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus one day match details


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->