நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வரவில்லை என்றால் எதிர்கட்சியுடன் சேர்ந்து உங்களையே வீழ்த்துவோம்.! அதிரடி ஆட்டத்தில் அமித் ஷா.. அண்டர் வேரோடு ஓடும் அரசியல்வாதிகள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி-சிவசேனா கட்சியின் கூட்டணியில் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

இந்நிலையில்., ஏற்கனவே டெல்லிக்கு வருகை தந்திருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்களை அழைத்து பேசிய அமித் ஷா அவர்கள் கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தேர்தலை தனியாக சந்தித்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்., நேற்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்த அமித் ஷா அங்குள்ள நிர்வாகிகளுடன் கலந்து தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டமானது நிறைவு பெற்றவுடன் அவர் கூறிய தொகுப்பாவது.,

பாரதிய ஜனதா கட்சியானது இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாகவும்., சுமார் 11 கோடி உறுப்பினர்களையும் பெற்றது. 2014 ம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த போது., வெறும் 6 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி பெற்று வந்த நிலையில்., தற்போது 16 மாநிலங்களில் நமது ஆட்சி நடைபெறுகின்றது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலானது நமது கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் பரீட்சை ஆகும்., இந்த தேர்தலை வெற்றி பெற கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக சென்று பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த 4 வருடங்களில் செய்த நலத்திட்டங்களை கூறி பிரச்சாரம் செய்ய வேண்டும். 

சிவசேனா கட்சியுடன் தகுந்த சூழல் ஏற்பட்டால் கூட்டணி இணைத்து வெற்றியை உறுதி செய்வோம்., இல்லையேல் எதிர்கட்சியுடன் சேர்ந்து வெற்றிபெற்று அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். 

பல வருடங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் எந்த விதமான வளர்ச்சியும் இல்லை., நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சொந்தமான வீடுகள் இல்லை... பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளில் ஏறும் வளர்ச்சி அடைந்துள்ளோம்., நாட்டின் வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியானது அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர். 

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை என்பது உறுதியான நிலையில்., காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல்காந்தியும்-சோனியாகாந்தியும் தொடர்ந்து பாரத பிரதமரின் மீதும்., நமது ஆட்சியின் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்., அவர்களுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you do not come to the coalition in the parliamentary elections amith sha speaks


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->