வாக்குச்சாவடியில் தேவையான ஆவணங்களின் பட்டியல், பூத் சிலிப் இனிமேல் செல்லாது!  - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

1. கடவுசீட்டு என்னும் பாஸ்போர்ட்

2. ஓட்டுநர் உரிமம் 

3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை. 

4. அஞ்சலக கணக்குப் புத்தகம், புகைபடத்துடன் இருக்க வேண்டும். 

5. பான்கார்டு

6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு 

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை ( 100 நாள் வேலை கார்டு )

8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு

9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. நாடாளுமன்ற - சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

11. ஆதார் கார்டு

வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும் போது, இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நிச்சயமாக எடுத்துச் செல்ல வேண்டும். முன்பு போல பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களுக்கு இந்த அடையாள அட்டை விஷயத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தின் போதே கவனம் செலுத்தினால் வாக்காளர்கள் குழப்பம் அடையாமல், சிரமம் இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

identity card for voting in voting booth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->