ஒரேயொரு எம்.பி சீட்டுக்காக.. காங்கிரஸ் கட்சியில் இணையும்.. சாதி சங்க தலைவர்.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தில் மக்களுக்கு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரக்கூடிய இளம் தலைவர் ஹர்திக் பட்டேல். தனது தீவிர போராட்டத்தால் நாடு முழுவதும் பேசப்பட்டார்.

மேலும் ஹர்திக் பட்டேல், தனது போராட்டங்களில் மத்திய அரசையும், பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். 

இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க ஹர்திக் பட்டேல் முடிவு செய்தார். மேலும் தனக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்ததாக தெரிகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ, சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மறுத்து. வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டால் சீட்டு உறுதி என்று கூறியுள்ளது.

இதனால் பட்டேல் சமூக மக்களின் தலைவராக கருதப்படும் ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் கட்சியில் அடுத்த வாரம் இணைய உள்ளதாகவும், காங்கிரஸ் வேட்பாளராக குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வரும் 12ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை, ஹர்திக் பட்டேல் நேரில் சந்தித்து காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், அப்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hartik patel joint to congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->