அம்பலமானது ரகசியம், நாளை கடத்தி கொண்டே போனதன் பின்னணி..!! தேர்தல் ஆணையமே, அவர்கள் கையில்..!! கண்ணை பறிக்கும், பட்டியல் - Seithipunal
Seithipunal


தேர்தல் தேதி அறிவிக்கும் பட்சத்தில், விதிகள் காரணமாக சலுகைகள் அறிவிக்க முடியாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன..

அதை மறுக்காத பாஜக, ஒவ்வொரு நாளும் புதிய புதிய சலுகைகளை அறிவித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

சுமார் 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தற்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

உள்ளாட்சிகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் ரூ. 16 ஆயிரத்து 500-ஐ ரூ. 25 ஆயிரமாக உயர்த்தியுள்ளார்.அடேங்கப்பா..இது இரு மடங்கிற்கு சற்று  குறைவு தான்..

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் சம்பளமும் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இலவச மருத்துவம் பெற ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சமாக இருக்க வேண்டும் என்ற வரம்பு தற்போது ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 1 மாதத்தில் 3 தடவை குஜராத் சென்று, புல்லட் ரயில், தொங்குபாலம் போன்ற திட்டங்களை துவங்கி வைத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,

நான்காவது முறையாக அக்டோபர் 22-ஆம் தேதி மீண்டும் குஜராத் செல்கிறார். அவர் குஜராத் செல்வதற்கு முன்னதாக, மேலும் சில சலுகைகள்,

அறிவிப்புகளை வெளியிட குஜராத் மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.அதுவரை குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarath election date and modi's plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->