அடிக்கடி தேர்தல் வந்தால் மட்டுமே ஜிஎஸ்டி விகிதம் குறையும்! கிண்டலாக கூறிய முன்னாள் மத்திய அமைச்சர்!! - Seithipunal
Seithipunal


அடிக்கடி சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் மட்டுமே, ஜிஎஸ்டி விகிதம் குறையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இதில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

நாப்கின், ராக்கி கயிறு, கோயில்கள் கட்டுமானத்துக்கு பயன்படும் கற்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், விரைவில் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறையும். இப்படி, அடிக்கடி சட்டப்பேரவைத் தேர்தல் வர வேண்டும். அப்போதுதான் ஜிஎஸ்டி குறையும் என்று கிண்டலாகப் கூறியுள்ளார்.

ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gst will decrease if the often the election comes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->