கோவா முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு வருடமாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) அவர்கள் நேற்று இரவு உயிர் இழந்தார். அவரின் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், அரசிய கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

கோவாவில் தற்போது ஆளும் கட்சியாக பாஜக உள்ளது, முதல்வரின் மறைவை அடுத்து அடுத்த முதல்வரை தேர்தெடுக்கும் பணியில் இறங்கியது. இதற்கிடையே, கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், இன்று மாலை பா.ஜ.க எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ, மத்திய அமைச்சர் மற்றும் மூத்த பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை முடிந்து, பாஜக மூத்த தலைவரும், சட்டமன்ற சபாநாயகருமான பிரமோத் சாவந்த் கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று இரவே பதவியேற்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOA NEXT CM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->