ஸ்டாலின் தேமுதிகவை தேடி சென்ற அதே வேளையில், அதிமுகவை தேடி சென்ற மற்றொரு கட்சி! மகிழ்ச்சியில் அதிமுக! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஏறக்குறைய கூட்டணி கட்சிகள், எந்த அணியில் இணையும் என்பது உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் தேமுதிக மட்டும் இந்தப்புறம், அந்தப்புறம் என்ற முறையில் ஆட்டம் காட்டி வருகிறது. 

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும், பின்னர் இது முழுக்க முழுக்க அரசியல் கூட்டணி பேச்சுக்காக தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் திருநாவுக்கரசர்  அறிவித்தார். 

இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவால் தேமுதிக எதிர்பார்ப்பதை கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தேமுதிக இரட்டை இலக்கில் தொகுதியை கேட்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயகாந்தை  திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்துள்ளார். 

அதிமுகவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தை முக ஸ்டாலின் சந்திக்கும் நிலையில் அவர் எந்த கூட்டணியில் இணைவார் என்று குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒருநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை துணை  முதலமைச்சர்  பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மதுரை விமானநிலையத்தில் வரவேற்றனர். 

அங்கு திடீர் திருப்பமாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக  திமுக பக்கம் சென்றாலும் அதனை சமாளிக்கும் விதமாக தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் சமநிலை ஏற்படுத்திவிடும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK vasan will meet amitshaw


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->