இபிஎஸ், ஓபிஎஸ் ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? சென்றதும், பாதி வழியில் திரும்பியதும் ஏன்? - Seithipunal
Seithipunal


கஜா புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் ஜீரணிக்க முடியாத சேதத்தை எதிர்கொண்டுள்ளன. பல இடங்களில் 20 வருடங்களாக வானுயர்ந்து நின்று விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வந்த தென்னை மரங்கள் எல்லாம் மண்ணை நோக்கி சாய்ந்து விட்டது.

சுழல் காற்றுக்கே சுருண்டு விழும் வாழை மரங்களை எல்லாம் புயல் சூறாவளி சுழற்றியடித்து கொண்டு சென்றுவிட்டது.மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. மின்மாற்றிகள் பழுதடைந்து விட்டது. லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துவிட்டது. சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு மண் எட்டி பார்க்கிறது.

மக்கள் இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் சரிவர சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படியான நிலை அங்கு நிலவி வரும் வேளையில் இன்னும் அதிமுக அமைச்சர்கள் முன்னெச்சரிக்கை புராணத்தை தான் பாடி வருகின்றனரே தவிர, அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக முடுக்கிவிடவில்லை.

உண்மை நிலையை மக்களிடம் உரக்க கூறினால், ஓடி வந்து உதவ லட்சம் மக்கள் காத்து கிடக்கின்றனர். ஆனால் புயலால் பாதிப்பு ஏற்படாதது போலவும், அரசு சாதனை செய்துவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளனர். இதற்க்கு முதல் காரணம் திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் முதல் ஆளாக தமிழக அரசை பாராட்டியது என்று தான் கூற வேண்டும்.

பதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் சூர் தண்ணி இல்லாமல் கதறி கொண்டிருக்கும் போது, மற்ற மாவட்ட மக்கள் புயல பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தங்களது வேலைகளை வழக்கம் போல் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் சமுக வலைதளங்களில் வெளியான காணோளிகள் கஜா புயலின் கோர தாண்டவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

இதன் பின்பே இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஆளும் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். நிலைமை தலைகீழாக மாறியது, மக்கள் பசியால் வாடிய வேளையில், நேற்று வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சென்று புயல் பாதிப்பை ஆய்வு செய்யாமல் இருபதற்கு எதிர்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று திருச்சி வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று, பின் அங்கிருந்து காரின் மூலம் புதுகோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட்டார்.பின் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் பதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு கொண்டிருந்த தமிழக முதலவர் சற்றுமுன் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தடைந்தார். மோசமான வானிலை காரணமாக முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கொந்தளிப்பில் இருப்பதால் தமிழக முதல்வர் நேரடியாக சென்று பார்வையிடுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாகவும், பார்வையிட சென்ற தமிழக அமைச்சர்களை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாலும், மேலும் தமிழக அமைச்சர் ஓ.எஸ் மணியன் பார்வையிட சென்ற இடத்தில இருந்து பைக்கில் தப்பி வந்த செய்திகள் முதல்வர் காதுக்கு வரவே, உச்சகட்ட பாதுகாப்புகளோடு தமிழக முதல்வர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்று, மோசமான வானிலை காரணமாக பாதியில் திரும்பி வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GAJA IMPACT TN CM PROGRAM CANCEL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->