பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைப்பு.! வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள்.!! பணிந்தது அரசு.!!! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று வாரங்களாக நடந்த மக்களின் மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக, பிரான்ஸ் அரசு பணித்துள்ளது. உயர்த்தப்பட்ட வரியினை குறைக்க வேறு வழியில்லாமல் முடிவு செய்துள்ளது., இதன் மூலம் பிரான்ஸ் நாட்டு மக்களின் இந்த மாபெரும் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை அதிகபட்சமாக சதவிகிதம் பிரான்ஸ் நாட்டின் அரசு உயர்த்தியது. இந்த அறிவிப்பை கேட்ட நாள் முதல் பிரான்ஸ் நட்டு மக்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி சமூக வலைத்தளம் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டதோ. அதேபோல், பிரான்ஸ் அரசுக்கு எதிரான சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் தொடங்கி நாட்டின் முக்கிய நகரங்களில் மாபெரும் போராட்டமாக மாறியது. 

பாரீஸ் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் திரண்டு வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். கடந்த மூன்று வாரங்களாக நடந்த இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாத பிரான்ஸ் அரசு, நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே, போராட்டத்தின் தீவிரத்தை பிரான்ஸ் அரசு உணர்ந்தது.

அதற்குள், மஞ்சள் வெஸ்ட் என்ற எதிர்ப்பு குழுவினர் பெயரில் நடந்த போராட்டத்தில் பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் கார்கள் கொளுத்தப்பட்டு, கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1968-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற மிக மோசமான கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், பலர் காயமடைந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட அரசு, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாச்சே., தலைவன் இல்லாத போராட்டம் என்பதால், வேறு வழியின்றி பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க முடிவுக்கு வந்துள்ளது.

இந்த போராட்டத்தில் 3 பேர் பலியாகினர் என்பது துயரமான ஒரு செய்தி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

france people protest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->