உயர்நீதிமன்றம் கண்டித்த பின்பும் தினகரன் தரப்பு அரங்கேற்றிய அநியாயம்.!! மொத்தமாக முன்னாள் எம்.எல்.ஏ உட்பட 15 பேர் வசமாக சிக்கினர்.!!  - Seithipunal
Seithipunal


விதி மீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளனர். 

''விதி மீறல் பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் உங்கள் அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சியில் சேர்ந்து விடுங்கள். 

இதுகுறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் இது தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசும், அதிகாரிகளும் இதற்கான விரிவான விளக்கத்தை நாளை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டனர்

இதற்கிடையே கடந்த வாரம், கோவையில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதை தட்டி கேட்ட டிராஃபிக் ராமசாமி மீது தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். 

அப்போது நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு, ''விதிகளை மீறிய பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவற்றுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டும் தமிழக அரசு இதுவரை ஏன் அவற்றை அமல்படுத்தவில்லை.

ஒவ்வொரு முறையும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு தான் அரசு செயல்படுமா? பேனர் குறித்த வழக்குகளும், அதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தீர்வு எப்போது'' என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், விதிகளை மீறும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியாதா?, அரசு அதிகாரிகள் கண்களை வாடகைக்கு விட்டுவிட்டு பறந்து செல்கிறீர்களா? என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதன்பின், தமிழக அரசு அதிகாரிகள் வீதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க தொடங்கினர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தாரமங்கலம் பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளதாக கூறி அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் தங்கவேல் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. 

நீதிமன்றம் இவ்வளவு கண்டித்த பின்பும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகள் செயல்படுவது, சமூகத்திற்கு ஆரோக்கியம் இல்லை. தமிழகத்தில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். 

தேர்தல் நெருங்குவதால் ஆளும் கட்சி முதல் அணைத்து கட்சி தொண்டர்களும் சாலை ஓரங்களில் பேனர் வைப்பதை வாடிக்கை ஆக்கிவிடவர். இது போன்ற பேனரால் தமிழகத்தில் பல உயிர்கள் போய் உள்ளன. இனி ஒரு உயிர் போகாமல் தடுக்க அரசியல் காட்சிகள் முதல் பொது மக்கள் வரை பேனர் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flex banner case file


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->