அமைச்சரின் செயலை பகிரங்கமாக அம்பலப்படுத்திய பெண் கலெக்டர் : அடுத்த ரூபாவாக சமூக வலைதளங்களில் வலம் வரும் கதாநாயகி! - Seithipunal
Seithipunal


கேரளா அமைச்சரின் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கடும் எதிர்ப்பையும் மீறி துணிச்சலாக அறிக்கை தாக்கல் செய்த பெண் கலெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறினார் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு தமிழக- கர்நாடக மக்களின் பாராட்டை பெற்றவர் சிறை அதிகாரி ரூபா.

அப்போது சமூக வலைதளங்களில் முழுவதும் ரூபா கதாநாயகியாக சித்தரிக்கப்பட்டார். அது போலவே தற்போது கேரளாவில் பெண் கலெக்டர் ஒருவர் கதாநாயகியாக வலம் வருகிறார். 

அது குறித்து சம்பவம் பின்வருமாறு: கேரள மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. இவர் மீது அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார் எழுந்தது. நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அரசு நிலத்தை அமைச்சர் தாமஸ் சாண்டி ஆக்கிரமிப்பு செய்தது குறித்து கேரளாவிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிதான் முதன்முதலில் பகிரங்கமாக செய்தி வெளியிட்டது. 

அதனையடுத்து இந்த பிரச்சனையை அங்குள்ள எதிர்கட்சிகள் கையில் எடுத்தன. ஆகவே இது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் ஆலப்புழா கலெக்டர் அனுபமாவுக்கு உத்தரவிட்டது.

இதனால் அமைச்சர் தாமஸ் சாண்டிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று உயர் அதிகாரிகள் மற்றும் பல அரசியல்வாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

ஆனால் அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கலெக்டர் அனுபமா துணிச்சலுடன் சேட்டிலைட் மூலம் நிலத்தை அளவீடு செய்தார். அப்போது  அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் பின்னரே அமைச்சர் தாமஸ் சாண்டி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

பெண் கலெக்டரின் இத்தகைய துணிச்சலான செயல் கேரள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரை கதாநாயகி போன்று தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The women's collector who boldly complains about social occupation of the site is commended for breaking the protest against the occupation of the land.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->