பாஜகவில் இருந்து விலகிய பிரபல தமிழ் நடிகர்! ஆமா, அது ஒரு கட்சி, சேர்றப்போ ஒரேயொரு மிஸ்டுகால் கொடுத்தா, உறுப்பினர் விலகுறதுக்கு ஒரு லெட்டர் எழுதிப் பேப்பரையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணனுமா?!' - Seithipunal
Seithipunal


நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க... நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை... ச்சீ த்தூ!' என  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து சூடாக பதிவு செய்திருந்தார் நடிகை ஆர்த்தி.. இது குறித்து அவரிடம் பேசிய போது அம்மாவையே கொன்னவங்களுக்குச் சாமானிய மக்களைக் கொல்வது கஷ்டமா?' என்றும் ட்விட் போட்டிருந்தார். 

நீங்களும் அரசியல் கட்சியில் இருக்கீங்களேனு கேட்டதற்கு திமுக தலைவர் கலைஞர் என் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கட்சியில நான் இருந்தேன். இவங்க ரெண்டுபேரும்  பதவியில இருந்தப்போது  வடக்க இருக்கிறவங்க தமிழ்நாடு கிட்ட சண்டை போடா நினைச்சாங்களா? இப்போ அவங்க  ஒருபுறம் நம்மை நசுக்குறாங்க. நிலைமை இப்படி இருக்கும்போது, நம்ம மக்களை நாமே சுட்டுக் கொன்னா, என்னங்க அர்த்தம்? என்றும் கோவமாக கூறுகிறார் ஆர்த்தி. 

ஸ்டெர்லைட் க்கு எதிராக பேசிய துணை நடிகை மீது கேஸ் போட்டுருக்காங்க என்றதற்கு, அதற்கெல்லாம் நான் பயப்படுறவ இல்லை.  கேஸ்தானே, வந்து போடுங்க. என் வீட்டுல சிலிண்டர் காலியாயிடுச்சு என்று நக்கலாக பதில் சொல்கிறார். 

உங்கள் கணவர் பி.ஜே.பி கட்சியில் இருக்கிறார்தானே?'  என்ற கேள்விக்கு, என்னைய போல  அவரும் இப்போ எந்தக் கட்சியிலேயும் இல்லை.  பாரதிய ஜனதாவுல  சேர்ந்தது உண்மைதான். ஆனால் அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் ஒதுங்கிட்டார் என்றும் கூறியுள்ளார். கட்சிக்கு முறைப்படி ஒரு கடிதம் எழுதிக்கொடுத்து ஒதுங்கிடுங்க'னு சொல்ல போக அதற்கு கணேஷ்கர்`ஆமா, அது ஒரு கட்சி, சேர்றப்போ  ஒரேயொரு மிஸ்டுகால் கொடுத்தா, உறுப்பினர் விலகுறதுக்கு  ஒரு லெட்டர் எழுதிப் பேப்பரையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணனுமா?!'  என்று கூறிவிட்டு சென்றாராம். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous tamil actor left from BJP


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->