பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! மருத்துவர் ராமதாசுடன் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


தமிழில் பிரபல நடிகராக இருந்தவர் ரஞ்சித். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஞ்சித் இன்று தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் MP ஆகியோரை சந்தித்து தன்னை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். அவர் இணைந்த போது பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா உடனிருந்தார். 

தமிழ்நாட்டில் மக்களுக்காக போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று  நடிகர் ரஞ்சித்  கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous tamil actor join in pmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->