டிடிவி தினகரனை தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டோம்! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal



அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி.தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் தரப்பிற்கும் பிரச்னை வெடித்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்று காழ்ப்புணர்ச்சியால் திவாகரன் பேசுகிறார் என்று கூறியுள்ளார். உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு என்றும் கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க திவாகரன் நினைப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 இந்நிலையில், தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நாங்கள் தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாராலும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

                                 

கரூர் தான்தோன்றிமலை நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு நகரச் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் மஹாலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி தமிழகத்தில் ஆளுகின்ற அரசு, மத்திய அரசைக் கண்டித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கண்டித்து என்கிற வார்த்தையைகூட போஸ்டர் , பேனர்களில் போடவில்லை. 

அவர்கள் மத்திய அரசுக்கு பயந்து வாரியம் அமைக்க வலியுறுத்தி என உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள். நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டுங்கள் விடுத்திருந்தோம் ஆனால் தைரியம் இல்லாத மாநில அரசு காவல்துறையிடம் எங்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டாம் என தடுத்திருக்கின்றனர்.

நாமக்கலில் நடந்த உண்ணாவிரதத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்ததோடு, பிரியாணியும் அவர் துறை சார்ந்த மதுபான வகைகளையும் கொடுத்து சேர்த்த கூட்டத்தை விட, டி.டி.வி.தினகரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம். இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பொறுக்க முடியாத தங்கமணி என்கிற தகரமணி, தவறான கருத்துகளைக் கூறி வருகிறார் என கூறினார்.

 சசிகலாவினாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும்தான் தங்கமணியும் அவரோடு சேர்ந்த அமைச்சர்களும் முதல்வர் உள்ளிட்டோரும் பதவி வாங்கினர். நான் இதை தங்கமணி ஊரிலேயே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன். 'சசிகலா தரப்பால்தான் பதவி வாங்கவில்லை' என்பதை அவர் சத்தியம் செய்ய தயாரா?. என கேள்வியெழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister senthil balaji say No one will be bound


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->