அதிமுக தனித்து போட்டியிட்டால் டெபாசீட் கிடைக்கும்!! காங்கிரஸ் தலைவர்  அதிரடி!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், 'தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர், இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அந்த பணமும் ஏழை மக்களுக்கு போய் சேராது.

ஏனென்றால் அந்த பணத்தை அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கூட சரியான கூலி கொடுக்காமல் குறைந்த கூலியை கொடுக்கின்றார்கள் .

அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட நேரிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது. தமிழகத்தில் வாக்கு வங்கி பாரதிய ஜனதாவுக்கு கிடையாது. 

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார்.

கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும் என அனைவரும் எதிர்பாத்து இருக்கின்றார்கள்' என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan say AIADMK is separately get the deposit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->