வாட்ஸ்அப்பில் வலம் வரும் எடப்பாடியின் வாய்ஸ்..!! முன் எச்சரிக்கையாக சொன்ன செய்தி..!! நல்ல டெக்னிக் தான்.. - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஒருபக்கம் வேம்பு கசாயம் குடிக்கலாம் என்கின்றார்கள் மறுபக்கம் பீதியை கிளப்புகிறார்கள்

 இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சர் இபிஎஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஆடியோ தற்போது  வாட்ஸ்அப் மூலம் வலம் வருகிறது

அதில் பேசியவாறு,

அனைவருக்கும் வணக்கம். டெங்கு கொசு நல்ல தண்ணீரில்தான் வளருகிறது. இந்த கொசு பகலில்தான் கடிக்கிறது..என்பது ஆராய்ச்சியில் கண்ட உண்மை..

காய்ச்சலை  தடுக்கும் வழிமுறைகள்?

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் முக்கிய மூலதனமான ஏடிஎஸ் புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்..

வீடுகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவிகள் உள்பட அனைத்து வசதிகளும் 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படுகிறது..இந்த காய்ச்சலை  குறித்த விழிப்புணர்வு அங்கு தொடர்ந்து அளிக்கபடுகிறது..

காய்ச்சல் ஏற்பட்டவர்கள் தாமதிக்க வேண்டா; உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.. ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம்...நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் இவ்வாறு அந்த மெசேஜ் உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS whasup message for people and awarness about dengue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->