சபாநாயகர் தனபாலுடன், ஈபிஎஸ் மற்றும்  ஒபிஎஸ் அவசர ஆலோசனை !! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியது. இந்த கோரிக்கையை ஆய்வு செய்து மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல்  வழங்கியது. 

மேகதாது அணை திட்டத்துக்கு, தமிழக அரசும், தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பது தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த. அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடிக்கும் கடிதம் மூலம் தமிழக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கி உள்ளது. 

இதைத்தொடர்ந்து, இன்று (06.12.2018) தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டி, மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்படி, தமிழக அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின் ஒருமித்த கருத்துடன் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அறையில் சபாநாயகர் தனபாலுடன் ஈபிஎஸ்,  ஒபிஎஸ் ஆலோசனை நடத்து வருகின்றனர். சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்டம் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

English Summary

EPS OPS Meeting Tamilnadu Assembly


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal