எல்லாம் முடியும் தருவாயில், தமிழக முதல்வருக்கும், ஸ்டாலினுக்கும் உயர்நீதிமன்றம் போட்ட தடை.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கோடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியைத் தொடர்புபடுத்திப் பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து தமிழக முதல்வரை சம்மந்தப்படுத்தி பேசி வருவதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ''உதகை நீதிமன்ற வழக்கு முடியும்வரை கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் தரப்போ, முதல்வர் பழனிசாமி தரப்போ வெளியில் பேசக்கூடாது'' என்று கூறி உத்தரவிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS AND STALIN DONT TALK ABOUT KODANADU ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->