பிரச்சாரத்திற்கு தடை! அரசியல் கட்சிகளுக்கு அதிரடியாக புதிய உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! கலக்கத்தில் கட்சியினர்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியல்,தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தேர்தல்ஆணையமும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றது.

 இந்நிலையில் பொதுக் கூட்டங்களின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சியினருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தற்போது பகல் நேரங்களிலும், பிற்பகலிலும், கோடை வெயில் கடுமையாக நிலவி வருகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்துவதால் தங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என சில அமைப்புகள் புகார் செய்துள்ளது.மேலும் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு வெப்பம் தாங்காமல் பலரும் உயிரிழந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. 

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடை வெயிலில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மேற்கூரைகள், மக்களுக்கு குடிநீர் வசதி, அவசரத் தேவைக்கு மருத்துவ வசதி போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவ்வாறு பல வசதிகளையும் மேற்கொண்டதை உறுதி செய்த நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commitee anounced about generalmeeting front of public


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->