மண்ணில் புதைக்கப்பட்ட கட்டுக்கட்டான 2000 ரூபாய் நோட்டுகள்.! தூத்துக்குடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்கு பதிவு கடந்த 11 ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 118 ஆம் தேதி, தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில், தமிழகம் மற்றும் புதவியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு, காலியாக உள்ள 19 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இன்னும் வாக்கு பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கருப்பூர் பகுதியில் உள்ள சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மண்ணில் ரூ.68 லட்சம் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது.

இதே போன்று, உருளைக்குடி அருகே உள்ள ஒருவரின் தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.7 லட்சத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELECTION COMMISSION RAID IN THOOTHUKUDI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->