அரசியல் கட்சிகள் இந்த பேரை சொல்லி ஒட்டு கேட்ககூடாது! தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனால் கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோவிலுக்குள் பல பெண்கள் செல்ல முயன்றதால் கேரளாவில் பெரும் போராட்டமே வெடித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதனால் பல கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பல கட்சியினரும் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவர்.

இதனை முன்னிட்டு கேரளா திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ அறிக்கைகள் வெளியிட்டு யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் விதிகளை மீறுதல் ஆகும்.

     

மேலும் சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commisioner announed to all parties about using name ayyappan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->