அவர்களின் ஆதரவு இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் முதல்வராக முடியாது.. அதிர இருக்கும் தமிழக அரசியல் களம்..!! - Seithipunal
Seithipunal


இதுகாலும் இறப்புகளையே சந்தித்து வரும் தமிழகத்தில், ஒரு பொறி மட்டும் தெறித்து விட்டால் போதும் பல மாற்றங்களை எதிர்நோக்க காத்திருக்கிறது.

கோவை சோமனூர் பகுதியில் கடந்த மாதம்  7ம் தேதி பேருந்து நிலைய கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அந்த சம்பவத்தின் தாக்கம் ஓய்ந்து முடிப்பதற்குள் இன்று நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுநாள் வரையிலும் ஒரு மந்திரி, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வீடு இடிந்து அதில் ஒருவராவது பலி என்ற செய்தியை என்றாவது நாம் கேட்டிருப்போமா..?

ஆனால் அவர்கள் மக்களுக்காக கட்டி கொடுக்கும் கட்டிடங்கள் மட்டும் இடிகிறதென்றால் அது யார் தவறு..?

மக்களின் உயிர் என்ன அவ்வளவு மதிப்பிழந்து போய் விட்டதா..? ஓட்டு கேட்க வரும் பொழுது காலில் விழும் கூட்டம், இப்போது போய் பாருங்கள் இறந்தவர்களின் உறவுகள் தோளில் விட கூட விட மாட்டார்கள்.

இப்படி ஒரு பிழைப்பு தேவை தானா..? எப்போது செங்கோல் ஆட்சி ஒழிந்து கொடுங்கோல் ஆட்சி தொடங்கியதோ அன்றில் இருந்தே மக்கள் பிழைப்பு தமிழகத்தில் திண்டாட்டமாக தான் இருக்கிறது.

இன்றைக்கு மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து வரும் படங்கள், மக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிக வசூல் குவித்து விடுகிறது.

அந்த வசூலுக்கு காரணமான பிரச்சனைகள் மட்டும், இன்னும் வாய் மூடிய மவுனியாகவே இம்மியளவும் வெளிப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

வாய்ப்புகளை பயன்படுத்தி வசதியை தேடிக்கொள்ள தான் இந்த பொழுதுபோக்கு சமூகம் நினைக்கும்.

அந்த வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி நம்மில் இருந்து விதைத்தால் தான், அதன் விளைபயன் விரைவில் தெரிய வரும்.

தோராயமாக எட்டு கோடி தமிழக மக்கள் என்றால், அதில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் சக்தி தான் இருக்கிறது.

திரை போதையில் சிக்கி மீள முடியாத இளைஞர்களை கழித்து விட்டாலும், மீதி இருப்பவர்கள் முயற்சித்தால் தமிழகம் இதுவரை கண்டிராத பல மாற்றங்களை காண வேண்டி இருக்கும்.

நம் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் முதலமைச்சர் ஆக முடியாது என்கிற நிலையை உருவாக்குவோம்.

சின்னத்தையும், கட்சி பெயரையும் பார்த்து ஓட்டு போட்ட காலம் நமது, தந்தை தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்.

கட்சி கொள்கையையும், வேட்பாளன் பின்னணியையும், அரசியல் அறிவையும் எடை போட்டு இனி நம் பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eight people died in Nagapattinam district's Porayar in Tamil Nadu after the roof of a restroom at a bus depot collapsed early on Friday.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->