எட்டி மிதித்த பாஜக....!! எட்டு வழிச் சாலையை கைவிடும் எடப்பாடி? - Seithipunal
Seithipunal


எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ரெய்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு.தற்போது தமிழக அரசியலில் நிலவிவரும் சூழலை பொறுத்தவரை அமித் ஷா வருகைக்கு முன்பு, அமித் ஷா வருகைக்குப் பின்பு என மாறிவிட்டது.

சில தினங்களுக்கு முன் சென்னை வந்த அமித்ஷா, நாட்டிலேயே தமிழகம் தான் ஊழல் நிறைந்த மாநிலம் என ஆளும் கட்சியை அட்டாக் செய்யும் விதத்தில் பேசிவிட்டுப் போனார்.இதனால் நொந்துபோன எடப்பாடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.அப்போது இவ்வளவு நாளா அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி,அவங்க இழுக்கிற இழுப்புக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தோம்.ஆனா இப்போ ஏதோ தமிழ்நாடுதான் ஊழல் மாநிலம் என்பது போல பேசிட்டு போயிருக்கிறாரு அமித்ஷா.

அம்மா மறைவுக்குப் பிறகு இதுநாள் வரை நாங்க யாரும் அவங்கள  எதிர்த்துப் பேசவே இல்லை.அது ஏன்னு உங்களுக்கும் தெரியும்.அவங்களுக்கு எதிரா பேசினா நிச்சயமாக எங்க ஆட்சிக்கு தொல்லை கொடுப்பாங்க.அதனால்தான் தமிழகமே அவங்களுக்கு எதிரா கொந்தளிப்பில் இருந்தும் நாங்க யாரும் இதுநாள் வரை அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

ஆனா,இப்போ எங்களை ஊழல் கட்சின்னு அவங்க பேசுறாங்க.வரும் பாராளுமன்ற தேர்தலில் அவங்களோடு நாங்க கூட்டணி வைக்க வேண்டும் என டீல் பேசினாங்க.தற்போதைய சூழலில் அப்படி கூட்டணி சேர்ந்தால் ஒரு இடத்தில்கூட யாரும் ஜெயிக்க முடியாது என நான் வெளிப்படையாகவே சொல்ல சொல்லிட்டேன்.அதனால் வந்த விளைவுதான் இது. இப்ப என்ன செய்யுறதுன்னு ஒன்னும் புரியாத சூழ்நிலையில்தான் நாங்க இருக்கோம்..’ என்று வேதனையுடன்  சொல்லியிருக்கிறார்.

                 

அனைத்தையும் பொறுமையை கேட்டுக்கொண்ட நாயுடு, “இவ்வளவு நாள் நீங்க பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவங்களுக்கு காரியம் ஆகுற வரைக்கும் அல்லது ஜால்ரா அடிக்கிற வரைக்கும் கூட வச்சுக்குவாங்க.அவங்கள எதிர்த்தால் எந்த எல்லைக்கும் போவாங்க.இது தெரிஞ்சதுதான்.மேற்கொண்டு என்ன செய்யலாம்னு நான் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்...’என்று சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னபடியே அடுத்த சில மணி நேரத்தில், எடப்பாடியை தொடர்புகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, ‘எனக்கு நெருக்கமான சட்ட வல்லுனர்களுடன் பேசினேன்.எந்தக் காரணத்தைச் சொல்லியும் அவங்களால உங்க ஆட்சியைக் கலைக்க முடியாது.எந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், உங்க ஆட்சி கலையாது. அவங்களால் கலைக்கவும் முடியாது. எல்லாம் சும்மா மிரட்டல்தான். இனி நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.அவங்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பிங்க.பாஜகவை  எதிர்த்தால் மட்டுமே நீங்க தமிழகத்தில் நிலைச்சிருக்க முடியும்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் இந்தியாவில் நிறைய இருக்கு.அங்கலாம் இப்படி தொல்லை கொடுக்கிறதுதான் அவங்களோட வேலை. எங்களை நம்பி நீங்க வந்தால், உங்களோடு நாங்க இருக்கோம். அதனால அவங்க என்ன பேசினாலும் இனி அமைதியா இருக்க வேண்டாம். பதிலடி கொடுங்க. அதனால் எந்த பிரச்சனை வந்தாலும்   கவலைப்பட வேண்டாம். எல்லாம் மிரட்டல்தான். அவங்களால எதுவும்  செய்ய முடியாது.

அவங்க மிரட்டலுக்கு பயன்படுத்தும் முதல் ஆயுதமே ரெய்டுதான்.செய்தால் செய்துட்டு போகட்டும்னு அமைதியா இருங்க. வரி கட்டலைன்னு சொல்லுவாங்க. வழக்கு போடுவாங்க. அதை சட்டப்படி பார்த்துக்கலாம். அதை காரணமாக காட்டியெல்லாம் ஆட்சியை கலைக்க முடியாது என்று ஆறுதலாக சொல்லியிருக்கிறார்.

         

அதன் பிறகே எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் பாஜகவை தைரியமாக எதிர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். எடப்பாடி தரப்பு எதிர்ப்புக்கு பிறகுதான் நாயுடு சொன்னது போலவே ரெய்டு படலம் தொடங்கியுள்ளது.இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவிடம் மீண்டும்  பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘நான்தான் முன்பே சொன்னேனே இதெல்லாம் நடக்கும் என்று. அடுத்த கட்டமாக உங்க வீட்டுக்கு கூட  வருவாங்க. கவலையே படாமல் இருங்க. இதெல்லாம்  வெறும் மிரட்டல்தான். மிரட்டி உங்களை பணிய வைக்கத்தான் இந்த வேலை. என்ன நடந்தாலும் அமைதியா வேடிக்கை மட்டும் பாருங்க. இனி பாஜக எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்க...’என்று சொல்லியுள்ளாராம்  சந்திரபாபு நாயுடு. அதன்படியே பாஜக எதிர்ப்பு அரசியலை தொடங்கிவிட்டார் எடப்பாடி.

அதன் முதல் வெளிப்பாடுதான் எட்டு வழிச் சாலை திட்டத்தைப் போராடிப் பெற்றோம் என்று சட்டமன்றத்தில் சொன்ன எடப்பாடி, அதன் பின் சேலம் சென்றபோது, ‘இது மத்திய அரசின் திட்டம்,இந்த திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, தமிழக அரசின் பணி நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே’ என்று பல்டி அடித்தது.

இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களது பெயரை கெடுக்க மக்கள் நலனை கருத்தில் கொண்டு எட்டு வழி சாலை திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவை எடுக்கலாமா என தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி. அப்படி ஒரு முடிவை எடுத்தால், மக்கள் மத்தியில் இன்னும் தனக்கான செல்வாக்கு கூடும் என்று நினைக்கும் எடப்பாடி,இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவது, அல்லது தள்ளிப்போடுவது என இரண்டில் ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போகிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi plan to drop hennai-Salem green corridor Expressway


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->