மக்களோடு மக்களாக சென்ற முதல்வர்.! வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்ற எடப்பாடி பழனிச்சாமி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில்., தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி., சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்க்காக மக்களுடன் வரிசையில் காத்திருந்து., பின்னர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி மக்களில் ஒருவராக சென்று தனது வாக்குகளை பதிவு செய்தார். சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்குகளை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜான் பதிவு செய்தார். 

சென்னையில் உள்ள திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் வாக்குகளை பதிவு செய்தார்., அதனை போன்று நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள மையத்தில் தனது வாக்கையும் பதிவு செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy vote her votes in edapadi school standing with peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->