நான் இருக்கேன் தீபா.. முதல் ஆளாக முந்தி வந்த பிரபலம்..? ஒரு தொகுதியில் போட்டியிட ஆள் கிடச்சாச்சு..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

சில மாதங்கள் பரபரப்பாக இயங்கி வந்த அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என தனிக் கட்சி தொடங்கினார்.

தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு தள்ளுபடியானதால் அவரால் போட்டியிட முடியவில்லை.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தனித்து போட்டியிடும் என்று அதன் பொதுச்செயலாளர் தீபா அறிவித்துள்ளார்.

மேலும், தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கடந்த மார்ச் 16  முதல் வாங்கப்பட்டு வருகிறது.

அதற்கான விருப்பமனுக்கள் பெறுவதை அவர் தொடங்கினார். முதல் ஆளாக தனக்கு வாய்ப்பு வழங்குமாறு டிரைவர் ராஜா விருப்பமனுவை பெற்றார். இது போல் இந்த தேர்தலில் தீபாவும் மாதவனும் போட்டியிடுகிறார்கள்.

அதற்கு அடுத்து மாதவன் தனது விருப்பமனுவை தீபாவிடம் கொடுக்கிறார். 3 தொகுதிகளுக்கு ஆட்களை தேற்றியாகிவிட்டது. மற்ற 37 தொகுதிகளுக்கு என்ன செய்வார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த சமயத்தில் மூவரில் ஒருவர் பிரிந்து சென்று தனி கட்சி தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver Raja from Deepa Peravai willing to contest in Loksabha elections 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->