தன்னை 'டுமிழிசை' என்று அழைப்பவர்களுக்கு தமிழிசை கேட்ட கேள்வி : கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் அனைத்தையும், அவர்களின் முந்தைய கருத்துக்களை வைத்து கேலியாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகளவில் விமர்சிக்கப்படுகிறார். அவருடைய தலை முடியை வைத்தும், பழைய பேச்சுக்களை வைத்தும், தமிழிசையா இல்லை டுமிழிசையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த டாக்டர் தமிழிசை, தன் மீதான இந்த கேலி, கிண்டல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசிய கட்சியில் தலைவராகவும், வலிமையான பொறுப்பில் இருக்கும் எனக்கு, நேர்மையானவள், நான் வகிக்கும் பதவிக்கு ஏற்ற தகுதியுடையவள் என்று நேர்மறை விமர்சனங்கள் பல உண்டு. 

இருந்தாலும், ஒரு சிலர் என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் கேலியாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவில் மிக வலிமையான தலைவராக நான் வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 

அதனால் தான் என்னுடைய தலை முடியையும், உருவத்தையும் வைத்து கிண்டல் செய்கிறார்கள். அதெற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. சிரித்துக்கொள்கிறேன்.

என்னுடைய பெயரை விக்கிபீடியாவில், டுமிழிசை என்று மாற்றியுள்ளனர். எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்.

என்னை இப்படி சித்தரிப்பவர்கள், இதே போன்று மற்ற அரசியல் தலைவர்களிடமும் கேட்பார்களா? அவர்களது பெயர்களையும் மாற்றுவார்களா? இது தான் நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Tamilisai question to netisons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->