மொத்த பாஜக தொண்டர்களும் எதிர்பார்த்த அந்த ஒத்த அறிவிப்பு.! அதிரடியாக முடிவை அறிவித்தார் தமிழிசை.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

மற்ற எந்த கட்சிகளின் கூட்டணியும் உறுதியாகவில்லை. மற்ற அனைத்து கட்சிகளுமே கூட்டணி தொடர்பான பேச்சி வார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி இல்லை என்று இந்த இரண்டு கட்சிகளே நாளை அதிகாரபூர்வமாக தெரிவித்தாலும் அதனை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த கூட்டணி அமைந்துள்ளது.

கடந்த வாரம் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்த போது கூட  அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அன்று மாலையே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களும் சென்னை வந்தார். கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த வந்ததாக பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

பின்னர் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் பாஜக 8 முதல் 12 தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதிமுக 4 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று தெரிவிக்கவே, கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக அதிமுக, பா.ஜ.க கூட்டணியில் பாஜக எந்ததெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியது அதன் படி, 

1. தென்சென்னை - டாக்டர். தமிழிசை சவுந்திரராஜன்
2. மத்தியசென்னை – எச்.ராஜா
3. கன்னியாகுமரி - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
4. கோயம்புத்தூர் - சி.பி.ராதாகிருஷ்ணன்
5. திருப்பூர் - வானதி சீனிவாசன்
6. மதுரை - மகாலட்சுமி அல்லது சீனிவாசன்
7. தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம் அல்லது வேலாயுதம்

இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்தும், போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மக்களவை தேர்தலில் தமிழிசை அவர்கள் போட்டியிட வேண்டும் என்று பாஜக தொடர்களின் எதிர்பார்ப்புக்கு பதிலளித்த தமிழிசை அவர்கள், ''கட்சி தலைமை சொன்னால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிட தயார்'' என்று தனது முடிவை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR TAMILISAI OPEN TALK ABOUT NOMINATION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->