முதல்வர் அசத்தல் அறிவிப்பு! அமலாகிறது, பூரண மதுவிலக்கு! டாக்டர் ராமதாஸ் பாராட்டு!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் ஜொரோம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜொரோம் தங்கா அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்ற  சட்டமன்ற தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடும் படியான வெற்றியை பெற்றள்ளது. அதே நேரத்தில் இந்த மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. சத்தீஸ்கரை தவிர்த்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் வெற்றிகரமான தோல்வியை பாஜக பெற்றுள்ளது. 

மிசோரம், தெலுங்கானாவில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவிற்கு வேலை இல்லாமல் போனது. அங்கு மாநில கட்சிகள் ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜொரோம் தங்கா, தாங்கள் அறிவித்தபடி மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த, 1997ம் ஆண்டு மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு, அந்த தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் கடைகள் அடைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கை முதல்வர் நிதிஷ்குமார் அமல்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது மிசோரமில் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மதுவிலக்கை தீவிரமாக கொண்டு வர வேண்டும் என போராடும் பாட்டாளி மக்கள் கட்சி இதனை வரவேற்றுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் பாமகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மிசோரம் முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் தன்னுடைய பாராட்டை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

"மிசோராம் மாநிலத்தில் மீண்டும் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: புதிய முதலமைச்சராக  பதவியேற்கும் சோரம் தங்கா - பாராட்டுகள். மக்கள் நலனில் அக்கறை காட்டி உங்களை முதல்வராக மக்கள் தேர்வு செய்ததை நியாயப்படுத்தியுள்ளீர்கள்!" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss wishes to mizoram govt for liqour ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->