டாக்டர் ராமதாஸ் - விஜயகாந்த் சந்திப்பு! அந்த தொகுதி தான் காரணமா? உண்மையான பின்னணி காரணம்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் 11மணியளவில் சந்திக்கிறார் என்ற தகவல் ஆனது காலையிலே வைரலாகியுள்ளது. அனைத்து தரப்பில் இருந்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

தமிழக அரசியல் கட்சிகளில் எதிர் எதிர் கட்சிகள் இல்லை என்றாலும் பெரும்பாலும் தலைவர்கள் இடையே நெருக்கமில்லாத கட்சிகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் தேமுதிகவும் இருந்து வந்தன. வடமாவட்டங்களில் பலமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அளவிற்கு தேமுதிகவும் வளர்ச்சி பெற்றது. 

இதற்கிடையே கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் பெரு முயற்சியினால் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலை உருவானது. அப்போது சுமூகமாக இருந்த அவர்களின் உறவானது, பின்னர் 2016 தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்ட  காரணத்தினாலே  தேமுதிக ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று விலகியது.

இதற்கிடையே நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தேமுதிக, அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் போதே, தேமுதிக தலைவரை நலம் விசாரிப்பதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் அரசியலை பேசி வந்தனர். ஆனால் திமுக, காங்கிரஸ் முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் 11மணியளவில் சந்திக்கிறார் என்ற தகவல் வெளியானது. கூட்டணி அரசியலுக்காக பார்க்கப்போனவர்கள் எல்லாம் உடல்நிலை விசாரிக்க வந்ததாக சொல்லிவிட்டு சென்றனர், கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்த பிறகு, உண்மையிலேயே உடல்நிலை விசாரிக்க போகிறவரை அரசியல் பேச போகிறார் என தவறான செய்திகளை கூட்டணி அமையாதவர்களின் ஆதரவு ஊடகங்கள் பரப்ப ஆரம்பித்து விட்டது. 

இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்த பிறகு, இரண்டு கட்சி தொண்டர்களிடையே ஒரு பிணைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக தலைவர்கள் சந்திப்பது, இயற்கையான ஒன்று தான். கடந்த முறை கூட்டணி அமைந்த போது கூட சந்திக்காத டாக்டர் ராமதாஸ் தற்போது உண்மையிலே விஜயகாந்தின் உடல்நிலையை விசாரிக்க செல்கிறார். மேலும் தொகுதிகளின் பட்டியல் ஏற்கனவே உறுதி ஆன நிலையில், தற்போது புதியதாக கிருஷ்ணகிரி தொகுதியை மையபடுத்தி குழப்பத்தை உண்டாக்கி உள்ளனர். ஆனால் பாமக கொடுத்த பட்டியலில் கிருஷ்ணகிரி தொகுதியே இல்லை என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss vijayakanth will meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->