துரைமுருகன் வீட்டில் ரைடு.! எல்லாம் போச்சு.!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்.!! - Seithipunal
Seithipunal


திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, வேலூர், காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென சோதனையிட்டனர்.

இந்நிலையில், இந்த திடீர் சோதனை குறித்து திமுகவின் மாநிலங்களவை எம்பி ஆர்.எஸ்.பாரதி தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அதில், ''இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், ஆளும்கட்சியினர் காவல் துறையைப் பயன்படுத்தியும், ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திட ஏற்பாடுகள் செய்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்தும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருக்கிறது. 

கடந்த 29-ம் தேதி  நள்ளிரவு தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்தபோது, அவருடைய வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வருமானவரி சோதனையா? (அல்லது) தேர்தல் பணி நிமித்தமான சோதனையா? என்று தெரிவிக்காமல் அவர் வீட்டில், சோதனை என்ற பெயரில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். இந்த சோதனை மூலம் அவர் "அப்பழுக்கற்றவர்" என்பதை தேர்தல் ஆணையம் உலகிற்கு உணர்த்தியமைக்கு நன்றி.

இந்தியத் தேர்தல் ஆணையம்,  மத்திய மற்றும் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணமாக இந்தச் சம்பவம் இருக்கிறது. திமுகவிற்கு  எத்தனை சோதனை வந்தாலும், ஜனநாயகத்தை மட்டும் நம்பி, தேர்தலில் நிற்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால், திமுக அஞ்சிடப் போவதில்லை. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள், ஜனநாயகத்திற்கும் அதன் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பதுதான் எங்களின் வருத்தமாகும். 

இனிவரும் காலங்களிலாவது ஆளும்கட்சியினர் வாக்குகளுக்கு, ஊழல் பணத்தை கொடுத்து வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை கைவிடும் அளவிற்கு, தேர்தல் ஆணையத்தின் பணிகள் அமைந்திடவும், ஆணையத்தின் கொள்கையான நியாயமான, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்பதை உறுதி செய்திட வேண்டுகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK WRITE TO LETTER ELECTION COMMISSION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->