கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு திருப்புமுனையா?! உற்சாகமாக தொடங்கிய திமுக மண்டல மாநாடு! - Seithipunal
Seithipunal


திமுக மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. சுமார் 400000 லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.  தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.


மாநாட்டின் 100 அடி உயரமுள்ள கம்பத்தில்  கட்சி கொடியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் ஏற்றி மாநாட்டினை தொடங்கினார்கள். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். 

மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி  இன்று தொடங்கி 2 நாட்களுக்கு ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. திமுக மண்டல மாநாட்டினால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொண்டர்கள் தங்களுக்கே உரிய பணியில் இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர் என ஸ்டாலினையும் உதயநிதியையும் அழைத்து மகிழ்ந்தனர். 

2006 க்கு பிறகு தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் திமுக இந்த மாநாட்டின் மூலமாக திருப்புமுனையை சந்திக்கும் என திமுக தலைவர்கள் நம்புகிறார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK state level conference in erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->