உதறலில் உளறிய அமைச்சர்... தினகரனும் ஸ்டாலினும் கூட்டு..? ஆட்சி கவிழ்ப்பின் அடுத்த கட்டமா..?! - Seithipunal
Seithipunal


தினகரனும், ஸ்டாலினும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

தினகரன் அதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற முயற்சி செய்வதாக எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே குற்றம் சாட்டினார்.

நியாயமாக பார்த்தால்  கட்சித்தாவல் தடை சட்டம் என்பது கொறாடாவின் உத்தரவை மீற வேண்டும், ஆனால் இந்த 18 பேரும் கொறடா உத்தரவை மீறவில்லை.

ஆளுநரிடம் மனு அளித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது கட்சித்தாவல் ஆகாது.

இது சட்டத்திற்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு விரோதமாக கூட்டு சேர்ந்து சதி செய்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர் என்று தினகரனுக்கு ஆதரவாக பேசினார்.

அப்போது இருந்தே ஒருவேளை சட்டசபை கூடினால் தினகரனுக்கு, திமுக தரப்பு உதவும் என்ற பேச்சு அடிபட்டு வந்தது.

மேலும், குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகரும் கூட்டணி அமைத்து இந்த வேலையை செய்துள்ளனர். இதனை சட்டசபையில் நாங்கள் தோற்கடிப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.

தற்போது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டும் வண்ணம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்து உள்ளார்.

தினகரனும், ஸ்டாலினும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும்,

ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், எந்த பலனும் ஏற்படப்போவதில்லை  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.

மென்மேலும் எடப்பாடி தரப்பு தினகரனையும், திமுகவையும் இணைத்து பேசி வருவதால், அனைத்து தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 

 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS camp claims majority after AIADMK meet, but Dinakaran and Stalin not convinced.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->