திமுகவின் திடீர் திட்டத்தில் விழுந்த பேரிடி! திமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி!  - Seithipunal
Seithipunal


40 தொகுதிகளுக்கான தமிழக மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது.  வெற்றியை நோக்கி அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான முறையில் திமுக ஸ்டாலின் தாகாத வார்த்தைகளை கொண்டு எதிர் கட்சி தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்கின்றார். வட தமிழகத்தில் மட்டும் திமுகவின் 20 தொகுதி வேட்பாளர்களில் 13 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது திமுக. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வடதமிழ்நாட்டில் பாமக பெற்ற வாக்குகளை கவனத்தில் கொண்ட ஸ்டாலின் பாமக விற்கு எதிராக பேசினால் மட்டுமே வன்னியர் வாக்குகளை பெறலாம் என்பதால், பாமகவின் வாக்கு வங்கியை கவர் செய்ய வட தமிழகத்தில் மரு.ராமதாசு மீது பல விமர்சனங்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வீசி வருகிறார்.  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ  என்ற அவருடைய பழமொழி போல திரும்ப திரும்ப அதையே பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த அவதூறுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நினைத்து இருந்த ஸ்டாலின் சற்றும் எதிர்பாராத வகையில் மரு ராமதாசிடமிருந்து அறிக்கை ஒன்று சாட்டையால் அடிப்பது போல் வந்தது. ஸ்டாலின்  கூறிய வன்னியர் சொத்து அபகரிப்பை நிரூபித்தால் நான் பொதுவாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் ஸ்டாலின் அரசியலிலிருந்தும் பொது வாழ்க்கையில் இருந்தும் வெளியேற தயாரா என சவால் விட, மரு.ராமதாசு அறிக்கை ஸ்டாலினை மனதளவில் கடுமையாக தாக்கியது. 

பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி  ஸ்டாலின் மீது  அவதூறு வழக்கு ஒன்றினை தேர்தல் ஆணையத்திடம் தொடுத்துள்ளார். இச்செயல்களை கண்டு அவசரப்பட்டு வாய் விட்டுவிட்டோமே என நினைத்த ஸ்டாலின் வழக்கம் போல திமுக அரசியலை கையில் எடுக்க நினைக்க பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. பாமகவிற்கு எதிராக பேசுவதற்கு என திமுகவில் இருக்கும் துரைமுருகனை சீட் கொடுத்து, ஐடி ரைடில் சிக்க வைக்க, எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகனுக்கு சீட் கொடுக்க மறுக்க, திமுக வன்னியர் தலைவர்கள் திமுக தலைமைக்கு இணங்கவில்லை. இதனால் கட்சிக்கு என இருக்கும் வன்னியர்கள் ஓட்டும் போய்விடுமே, முதலுக்கே மோசமாச்சே என அஞ்சிய ஸ்டாலின் அடுத்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளார். 

இதனையடுத்து நேரடியாக மோதுவதில் இருந்து ஸ்டாலின் பின்வாங்கி வாயை மூடிக்கொண்டு திரைமறைவில் ஓடி ஒளிந்து கொண்டார். இந்த கையாலாகாத நிலைமையை சமாளிக்க வன்னிய சிறு அமைப்பு தலைவர்களான வேல்முருகன், காவேரி, பொன்குமார், மற்றும் C N ராமமூர்த்தி போன்றோர்களை பாமகவுக்கு எதிராக பிரச்சாரங்களை பரப்பும் அசைன்மென்ட்டை கொடுத்துவிட்டு (வட தமிழகத்தில் வன்னிய வேட்பாளர்களை நிறுத்தாமல்), அச்சோ அவசரப்பட்டு வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோமே என மனதில் எண்ணி மன குமுறலுடன் நொந்து போயுள்ளார் ஸ்டாலின். திமுக தொண்டர்களும் எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றும் குமுறி வருகின்றனர். 

இவர்கள் பாமகவிற்கு எதிராக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சிக்கல் நீடிக்கிறது. மேலே குறிப்பிட்டவர்கள் யாரும் எந்த கட்சியின் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. அதனால் அவர்கள் தனி கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்தால் அது, வேட்பாளர் செலவு கணக்கில் மட்டுமே சேரும். ஆனாலும்  கடலூர் மக்களவைத் தேர்தலில் பாமக வின் வியூகங்களை சமாளிக்க முடியாமல் எதிர்க்கட்சியான திமுக தவிக்கிறது. வன்னியர் வாக்குகளை ( இவர்களுக்கு அவர்களிடத்தே ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ அது வேற விஷயம்) பெற வேல்முருகன் போன்றவர்களை பேச வைக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆனாலும் செலவு கணக்கு இடிக்குமே என்ற பிரச்சனை நீடிக்கிறது. 

இதனை தவிர்க்க தவாக வேல்முருகனை பிரச்சார களத்தில் நட்சத்திர பிரச்சார நபராக இறக்க திட்டமிட்டது திமுக. இந்த செலவை தவிர்க்க தவாக வேல்முருகனுக்கு அழுத்தம் கொடுத்து நட்சத்திர  பிரச்சார நபராக அறிவிக்க வழக்கு தொடுக்குமாறு தூண்டிவிட்டார் ஸ்டாலின். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வளவு நாட்களாக எங்கே சென்றீர்கள் திடீரென அப்படியெல்லாம் அறிவிக்க இயலாது தேர்தல் நட்சத்திர  பிரச்சார நபராக பெயர் பட்டியல் அறிவிக்கும் கால வரையறை முடிந்துவிட்டது என தீர்ப்பு கூறி வெளியே அனுப்பியது.

இது ஸ்டாலின் திட்டத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. வேல்முருகனை நட்சத்திர  பிரச்சார நபராக அறிவிக்க முடியாமல் போனதால் தனி கூட்டங்கள் இல்லாமல் பொதுக்கூட்டங்களில் ஒரு நபராகவே பேச வேண்டிய சூழல் உள்ளது. 4 தேர்தல் தோல்விக்கு பிறகும் மக்களிடையே நம்பிக்கையை பெற முடியாமல் திமுக திணறி வருவது ஸ்டாலின் தலைமையின் மீது சந்தேகத்தை உண்டாக்குகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk plan with tvk is failed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->