வாக்குக்காக வாய்விட்ட ஸ்டாலின்! காங்கிரஸ்க்கு பயந்து எஸ்கேப் ஆனதால் அம்பலம் ஆன திமுகவின் இரட்டை வேடம்!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பொழுது 7 தமிழர்களை விடுதலை முக்கியமானது என்ற கோரிக்கையுடன் பாட்டாளி மக்கள் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி ஒப்பந்தத்தினை மேற்கொண்டது. 

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்ட மன்றத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஏறக்குறைய ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. இதற்கிடையே மௌனம் காத்துவந்த தமிழக அரசியல் கட்சிகளும் பாமக அதிமுகவுக்கு கோரிக்கை வைத்த பின் ஒன்றன் பின் ஒன்றாக 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டு கொண்டிருந்தனர். 

இந்நிலையில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்த மனித சங்கிலி போராட்டம் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பாண்டிச்சேரியிலும் இன்று மாலை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொண்டனர். மேலும் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் தாங்கள் வைத்த கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உடன் கலந்து கொண்டார். 

ஆனால் ஏழு தமிழர் விடுதலைக்காக அறிக்கையை வெளியிட்ட மு க ஸ்டாலின் இந்த போராட்டத்தில் திமுக கலந்துகொள்வது குறித்தும், ஆதரவளிப்பது குறித்தும் எதுவும் பெரிதாக பேசவில்லை. மேலும் இந்த போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்கவும் இல்லை. ஏனெனில் 7 தமிழர் விடுதலையை பெரும்பாலான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்பதாலும் காங்கிரஸின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதாலும் திமுக கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

வாக்குக்காக 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுத்த மு க ஸ்டாலின், அதே தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் உடனான உறவை இணக்கமாக வைத்துக் கொள்ள தற்போது இந்த போராட்டத்தினை புறக்கணித்துள்ளார். 7 தமிழர் விடுதலையை முழுமனதுடன் திமுக ஆதரிக்கவில்லை என்றும், முழுக்க முழுக்க தேர்தலுக்காகவே அவர்கள் பயன்படுத்தினார்களா எனவும் சந்தேகம் எழுகிறது என பலரும் விமர்சனங்கள் வைத்துள்ளார்கள்.

இதற்கேற்றாற்போல் இன்று மதியம் சேலத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி 7 தமிழர் விடுதலையில் திமுக அமைச்சரவை செய்தது என்ன? கலைஞர் எழுதி வைத்தது என்ன? என்பதனை நான் வெளியிட விரும்பவில்லை என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

சாதாரண மக்களாகிய அனைவருக்குமே காங்கிரஸுக்கு பயந்தே திமுக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா? அதனால் தான் முக ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லையா? தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் நேர்காணல் மட்டுமே முக்கியமா? என்ற கேள்விகளையும் திமுகவை நோக்கி தொடுத்து வருகின்றனர். இதனால் திமுக இரட்டை வேடம் போடுகிறதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk not participated in human chain protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->