செந்தில் பாலாஜியால், ஏற்பட்ட குழப்பம்!! திமுக_MLA 7 பேர் அமமுகவில் இணைகின்றனர்?! அதிர்ச்சியில் ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அமமுகவின் தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்திருந்தால், தமிழக அரசியல் என்பது தலைகீழாய் மாறி இருக்கும். ஆனால் தீர்ப்பு பாதகமாக வர எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. 

அதில் இருந்து தினகரன் தரப்பு ஆட்டம் கண்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுகவில் இணைந்த, செந்தில் பாலாஜியை வைத்து ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளது திமுக. செந்தில் பாலாஜி இணைந்ததில், திமுகவில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அன்றே தினகரன் எச்சரித்தார். 

அது ஸ்டாலினுக்கு தற்பொழுது தான் புரிந்திருக்கும். திமுகவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏவுடன் தினகரன் டீல் பேசியதாக சில தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு அந்த மூத்த எம்எல்ஏக்களும் சம்மதம் தெரிவித்துள்ளனராம். 

இதனையடுத்து, அமமுக சார்பில் மிகப்பெரிய விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. இதையறிந்த ஸ்டாலின், அதிர்ச்சியில் உடனடியாக அனைத்து எம் எல் ஏ கூட்டம் போட திட்டமிட்டுள்ளார். அக்கூட்டத்தில் அவர்களை சமாதானப்படுத்த இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mlas going to ammk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->